இந்தியா

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

DIN


சி.பி.எஸ்.சி.இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாடு முழுவதும் இன்று துவங்குகிறது.

நாடு முழுவதும் 12 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதும் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 5 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு, வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இ திட்டமிட்டுள்ளது. 

வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT