ஜம்மு: புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வியாழன் அன்று நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து, உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் புல்வாமா கோர தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்து மத்திய அரசு ஞாயிறன்று உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.