இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

DIN


மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT