இந்தியா

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு 

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது எல்லைப்  பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

IANS

சண்டிகார்: பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது எல்லைப்  பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் டேரா பாபா நானக் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை காலையில் நிகழ்ந்துள்ளது.  இந்த பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இளம்பெண் ஒருவர் இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளார். இதைக் கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அந்தப் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத் திரும்பச் செல்லுமாறு கூறியுள்ளனர்.  ஆனால் அவர் அதைக் கேட்காமல் தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றார்.

இதன் காரணமாக பாதுகாப்பு படை நடைமுறைகள் படி அந்தப் பெண் மீது படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அந்தப் பெண் இந்திய எல்லைப்பகுதியில் மயங்கி விழுந்தார்.

உடனே அந்தப் பெண்ணை பாதுகாப்புப் படையினர் டேரா பாபா நானக் பகுதி மருத்துவனையில்  சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக எல்லைப்  பாதுகாப்பு படைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT