இந்தியா

ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர்: ப.சிதம்பரம் 

DIN

சென்னை: அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை உத்தர பிரதேசம் கோரக்பூரில் ஞாயிறன்று பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இந்நிலையில் அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். ஐந்து பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா? இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன?.

மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள்!. அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT