முகப்பு
இந்தியா

ஹிமாசல்: பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயம்

ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய- சீன எல்லையிலுள்ள ஷிப்கி லா பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 இந்திய ராணுவ வீரர்கள் 5 நாள்களாகியும் மீட்கப்படவில்லை. 

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:25 am IST
பகிர்:


ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய- சீன எல்லையிலுள்ள ஷிப்கி லா பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 இந்திய ராணுவ வீரர்கள் 5 நாள்களாகியும் மீட்கப்படவில்லை. 
ஹிமாசலப் பிரதேச மாநிலம் கிண்ணனூர் மாவட்டம் ஷிப்கி லா  எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே கடந்த புதன்கிழமை காலை 11 மணியளவில் 6 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 4 பேர் ஹிமாசலப் பிரதேசத்தையும், மற்ற இருவரும் உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். அப்போது, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 6 ராணுவ வீரர்களும் புதைந்து போனார்கள். அவர்களில் ஹவில்தார் பதவி வகிக்கும் ராகேஷ் குமார் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மட்டும் அன்று மாலையே மீட்கப்பட்டது. மற்ற 5 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
நிகழ்விடத்தில், ராணுவ ஊழியர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்விடத்துக்கு அருகே மேகமூட்டம் மிகுந்து காணப்படுவதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்படுவதாக மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கியது.  தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை மேற்கு ராணுவ தளபதி தலைமையிலான ராணுவ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
இதனிடையே, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் குமாரின் உடல் அவரது சொந்த ஊரான பிலாஸ்பூர் மாவட்டம் கும்மார்பூரில் முழு ராணுவ மரியாதையோடு வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.