முகப்பு
இந்தியா

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது: கர்நாடக துணை முதல்வர்

தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

Updated On : 25 பிப்ரவரி, 2019 at 4:35 PM
பகிர்:


தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

கர்நாடகாவில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் சாலவாடி பட்டியலின சமூகத்தினர் கூட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"தலித் தலைவர்களுக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் பசவலிங்கப்பா, கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேஹெச் ரங்காநாத் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் முதல்வர்களாகியிருக்க வேண்டும். நான் தலித் என்பதால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. ஆனால், மனமில்லாமல் ஒருவழியாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

Advertisement

அரசு அளவிலும் தலித்துகள் மீது பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு வசதி இருந்தாலும், பதவி உயர்வில் அநீதி இழைக்கப்படுகிறது. பதவியிறக்கம் செய்யப்பட்ட 7 அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த எங்களது அரசு அடுத்த வாரம் புதிய விதிகளை கொண்டு வரும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.