இந்தியா

சமாஜவாதி, பகுஜன் சமாஜ் இடையே மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

DIN

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான தொகுதிப் பங்கீடு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் 29 நாடாளுமன்றத் தொகுதிகளும், உத்தரண்டில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளும் மொத்தம் உள்ளன.

இதில் பகுஜன் சமாஜ் அதிக இடங்களில் போட்டியிடுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் கத்வால் தொகுதியில் மட்டும் சமாஜவாதி கட்சி போட்டியிடுகிறது. அதுபோன்று மத்தியப் பிரதேசத்தில் பாலாகட், திக்ரி மற்றும் கஜுராவோ ஆகிய 3 தொகுதிகளில் சமாஜவாதி போட்டியிடவுள்ளது. இதர அனைத்து இடங்களிலும் பகுஜன் சமாஜ் களமிறங்குகிறது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் திங்கள்கிழமை கூட்டாக அறிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT