இந்தியா

நாடாளுமன்றத் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட  அரசியல்  கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் விரைவில்  ஆலோசனை 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது.

DIN

புது தில்லி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பினை மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. .  

இந்த ஆலோசனையில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற நாட்கள் மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை  நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தினை இரண்டு நாட்களாக நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

அதேசமயம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மார்ச் 4 - ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ள தேர்தல் ஆணையமானது, அங்கு மாநில காவல்துறை தலைஓவருடன் ஆலோசித்து தேர்தல் தேதிகள் முடிவு செய்யபப்ட்ட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT