ராணுவ நடவடிக்கையால் மக்களவைத் தேர்தலில் பாஜக 22க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்கும்: எடியூரப்பா
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சித்ரதுர்கா: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து இந்தியப் பிரதமராக மோடியை மீண்டும் பதவியில் அமரவைக்க கர்நாடக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடியூரப்பா, பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை அழிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவெடுத்து, நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்திய இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடித் தாக்குதல் நிச்சயம் மோடிக்கு பலம் சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை இந்திய ஆயுதப் படையினர் தாக்கி அழித்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக இருபத்து இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அவர் துல்லியமாகக் கூறியுள்ளார்.
Advertisement
பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.