இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: ரயில்வே நிர்வாகத்திற்கு பாதுகாப்பு எச்சரிக்கை

DIN


புதிதில்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருவகை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய ரயில்வே பாதுகாப்பு படை அறிக்கை அனுப்பியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது

இந்நிலையில், அனைத்து ரயில்வே நிர்வாகமும் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா ரயில்களையும் மிகுந்த பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் இயக்க பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எந்த ரயில்களும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நிலவும் நிலவரம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானப் படைத்தளங்கள், கடற்படைத் தளங்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. மும்பை, அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT