இந்தியா

மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களை பெயர்  கூறி வெளியேறச் சொன்ன வெங்கய்ய நாயுடு 

IANS

புது தில்லி: மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

புதன்கிழமையன்று மாநிலங்களவை கூடியதும் கர்நாடகாவின் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதன் காரணமாக அவை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய தமிழக உறுப்பினர்களை மாநிலங்களவைத்  தலைவரான  துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பெயர்  கூறி வெளியேறச் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு மதியம் அவை கூடியதும், மாநிலங்களவைத்  தலைவரான  வெங்கய்ய நாயுடு தமிழகத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களை பெயரைக் கூறி எழுப்பி, இன்று முழுவதும் அவையில் இருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். 

அவ்வாறு கூறப்பட்டவர்களில் திமுகவின் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோர் அடங்குவர். 

அவ்வாறு உத்தரவிட்ட பிறகு அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT