முகப்பு
இந்தியா

மோடிக்கு வாக்களியுங்கள்: திருமணப் பரிசாகக் கேட்கும் மணமக்கள்; வைரலாகும் அழைப்பிதழ்

பொதுவான திருமண அழைப்பிதழ் போல் அல்லாமல், சூரத்தைச் சேர்ந்த மணமக்களின் அழைப்பிதழில் தங்களுக்கு திருமணப் பரிசாக என்ன வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 ஜனவரி, 2019 at 3:46 PM
பகிர்:


பொதுவான திருமண அழைப்பிதழ் போல் அல்லாமல், சூரத்தைச் சேர்ந்த மணமக்களின் அழைப்பிதழில் தங்களுக்கு திருமணப் பரிசாக என்ன வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருமண அழைப்பிதழ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாக திருமணத்தில் மொய் விலக்கப்பட்டுள்ளது என்று பதிவிடுவார்கள். ஆனால் தங்களுக்கு திருமணப் பரிசாக என்ன வேண்டும் என்று கூறுவார்களா? இங்கேக் கூறியுள்ளார்கள்.

திருமண நிகழ்ச்சியைப் பற்றியும், நிகழ்ச்சி நிரலும் வழக்கமான திருமணப் பத்திரிகைகளில் இருப்பதைப் போன்றே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், கடைசியாக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்குங்கள். இதுவே நீங்கள் எங்களுக்கு அளிக்கும் திருமணப் பரிசாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அதுவும் கொட்டை எழுத்துகளில்.

Advertisement

இந்த குடும்பத்தினர், மோடிக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க, திருமண நிகழ்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.

இதே போல மேலும் சிலரும் மோடிக்கு ஆதரவு கேட்டு தங்களது திருமண பத்திரிகைகளில் வேண்டுகோள் வைத்திருப்பது விநோதமாகவே உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.