இந்தியா

உஸ்பெகிஸ்தானில் சுஷ்மா ஸ்வராஜ்

DIN

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றார்.
 இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
 உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லஸீஸ் கமிலோவ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைக்கு சுஷ்மா ஸ்வராஜ் இணைந்து தலைமை தாங்குகிறார்.
 ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், கஜகஸ்தானின் முதல் வெளியுறவு துணை அமைச்சரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள்.
 இந்தத் தகவல்களை சுஷ்மா ஸ்வராஜ் புறப்பட்டுச் சென்ற பிறகு, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் பதிவு செய்தார்.
 வரலாறு, கலாசார ரீதியில் அதிக தொடர்புடைய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா ஆர்முடன் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.
 பிராந்தியப் பிரச்னைகள், வர்த்தகம், பொருளாதார உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இதன்மூலம், அந்நாடுகளுடான இந்தியாவின் உறவு புதிய கட்டத்தை அடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மத்திய ஆசிய நாடுகளுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
 இந்தப் பிராந்தியத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தெற்காசிய நாடுகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT