இந்தியா

2016 ஜேஎன்யு தேசத் துரோக வழக்கு: 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

2016-இல் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்ட ஜேஎன்யு மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் தில்லி போலீஸார் 1200 பக்க குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளனர். 

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக இடதுசாரி மாணவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இதையடுத்து, கண்ணையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் மீது கடந்த 2016-இல் தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி போலீஸார் 1200 பக்க குற்றப்பத்திரிகையை இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்துள்ளனர்.   

இந்த குற்றப்பத்திரிகையை, தில்லி பட்டியாலா நீதிமன்றம் நாளை பரிசீலனை செய்யவுள்ளது. 

குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனீர்பன் பாட்டாச்சார்யா, அக்விப் ஹூசைன், முனீப் ஹூசைன், உமர் குல், ராயீ ரசூல், பஷீர் பாட், ஷேஹ்லா ரஷீத் மற்றும் சிபிஐ தலைவர் டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜா ஆகியோரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124ஏ 323, 465, 471, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர் கண்ணையா குமார் கூறுகையில், 

"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த செய்தி உண்மையானால் போலீஸாருக்கும், மோடிக்கும் நன்றி. 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதால், இது அரசியல் உந்துதல் என்பது தெளிவாக வெளிப்படுகிறது. இந்தியாவின் நீதித்துறையை நான் நம்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT