இந்தியா

திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனம்

DIN

திருமலையில் வரும் 22ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கும், 23ஆம் தேதி கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவசமாக ஏழுமலையான் தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
 வரும் 22ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசிப்பர்.
அதைத் தொடர்ந்து, 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு "சுபதம்' பகுதி வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT