இந்தியா

மத்திய பட்ஜெட்: விவசாய கடன் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு

DIN

மத்திய பொது பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் மத்திய அரசு கடனுதவி அளித்து வருகிறது. இந்தத் தொகையை ஆண்டுதோறும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்நிலையில், வரும் நிதியாண்டிலும் விவசாயிகளுக்கான கடன் தொகை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: 
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், அந்த ஆண்டு மட்டும் ரூ.11.68 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது.
அதற்கு முன்பு, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இருப்பினும், அந்த ஆண்டில் ரூ.10.66 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டில்(2018-2019), விவசாயிகளுக்கான கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. வரும் 2019-2020-ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கான கடன் இலக்கை 10 சதவீதம் அதிகரித்து, ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது.
வழக்கமாக, விவசாயிகளுக்கு வழங்கும் கடனுக்கு 9 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. எனினும், ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT