இந்தியா

கர்நாடகாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பரிதாப பலி  

கர்நாடகாவில் கர்வார் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன 

DIN

கர்வார்: கர்நாடகாவில் கர்வார் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன 

வடக்கு கர்நாடகாவின் கர்வாரில் உள்ள உள்ள கோவில் ஒன்றுக்கு குழு ஒன்று சென்றுவிட்டு கடல் பகுதியில் படகில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டது என அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது மீதமுள்ள 16 பேரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகிறார்கள். தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT