இந்தியா

அவதூறு வழக்கு: ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தில் ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிப்பு

DIN


மும்பை: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தில்  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ்-அமைப்பின் சித்தாந்தங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி மீது, அந்த அமைப்பின் தொண்டர்கள் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஆஜராக மும்பை வந்த ராகுல் காந்தி, சேவ்ரி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ரூ.15 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் செல்ல உத்தரவிட்டது.

முன்னதாக மும்பை விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT