இந்தியா

கர்நாடகாவில் மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: தொடரும் நெருக்கடி 

DIN

பெங்களூரு: கர்நாடகாவில் தொடரும் அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு நாட்களில் பதவி விலகிய 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்குமாறு சபாநாயகரை அறிவுறுத்த வேண்டும் என்று கோரி, கர்நாடக மாநில ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா புதனன்று மனு அளித்தார்.

முன்னதாக சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்த எடியூரப்பா  14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்றும், உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 17-ம் தேதிக்குள் எனது முடிவை அறிவிப்பேன் என்று அவரிடம் சபாநாயகர் ரமேஷ் குமார் பதிலளித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் தொடரும் அரசியல் நெருக்கடியின் தொடர்ச்சியாக மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏ.க்களான எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் புதன் மாலை சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதன் காரண்மாக குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி முற்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT