இந்தியா

தேசிய மலராக எந்த மலரும் அங்கீகரிக்கப்படவில்லை: மத்திய உள்துறை இணையமைச்சர்

DIN


நாட்டின் தேசிய மலராக எந்த மலரும் இதுவரை மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.
மாநிலங்களவையில் இந்தத் தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் வாயிலாக, நாட்டின் தேசிய விலங்காக புலியும், தேசிய பறவையாக மயிலும் அங்கீகரிக்கப்பட்டது.
ஆனால் நாட்டின் தேசிய மலராக எந்த மலரும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. அதுதொடர்பான அறிவிக்கை எதையும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ மாற்ற அமைச்சகம் வெளியிடவில்லை என்று அந்தப் பதிலில் நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT