இந்தியா

லிப்ஸ்டிக்கில் என்னவெல்லாம் கலக்கப்பட்டிருக்கிறது? விரைவில் தெரிந்து கொள்ளலாம்

ENS


லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய மருந்து பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதாவது, லிப்ஸ்டிக் உட்பட அலங்காரப் பொருட்களில் என்னென்னப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது, அது எதற்காக கலக்கப்படுகிறது என்பது குறித்து அந்தந்தப் பொருட்களில் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை முக அலங்காரப் பொருட்களில் கலக்கப்படும் பொருட்கள் பற்றி அறிவிக்க வகை செய்யும் எந்த விதிமுறையும் இல்லை. அதேப்போல, இந்த விவரங்கள் எதையும் கோராமல்தான் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

முக அலங்காரப் பொருட்களின் மனிதனின் சருமத்தை கடுமையாக பாதிக்கும் ஆசிட் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT