இந்தியா

பாஜகவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், ஆளும் பாஜகவில் குழுவாக புதன்கிழமை இணைந்தனர். ஏற்கெனவே கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, கோவாவில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் விலகியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கையில் பதாகைகளை ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் அவர்கள் எழுப்பினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT