இந்தியா

போலாவரம் திட்ட விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN


போலாவரம் அணை கட்டும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த தேசிய மனித உரிமை ஆணையம் அதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் போலாவரத்தில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்காக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வேறு இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். 
அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அரசின் உத்தரவை அமல்படுத்த உத்தரவுவிடுமாறு இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தப் புகாரை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது என்று கூறி அந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முடிவு சரியாக இல்லை. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு இதில் பாதிப்பை ஏற்படுத்தாது. 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் போலாவரம் அணை கட்டும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. எனினும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு வியாழக்கிழமை விசாரித்து, மனுதாரரின் மனுவை 3 மாதங்களுக்குள் மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT