இந்தியா

மும்பை டோங்கிரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 40 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல்

மும்பையின் டோங்கிரி பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ANI


மும்பை: மும்பையின் டோங்கிரி பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பராமரிப்பில்லாத பழைய கட்டடம் என்பதால், கடந்த வாரத்தில் பெய்த கன மழை காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக கட்டட இடிபாட்டில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிந்துவிழுந்த இடம் மிகக் குறுகிய சாலைகளைக் கொண்டிருப்பதால் மீட்புக் கருவிகளைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT