இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புது தில்லி: கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிடக் கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், வழக்கை இன்று விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டது.