இந்தியா

ஜூலை மாதத்தின் மிக அற்புதமான நாள் இன்று: தமிழ்நாடு வெதர்மேன்

வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது ஆங்காங்கே லேசான தூறலும், சில இடங்களில் மழையும் பெய்தால் அது ஊட்டியோ அல்லது கொடைக்கானலாகவோ தான் இருக்க வேண்டுமா?

DIN


சென்னை: வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது ஆங்காங்கே லேசான தூறலும், சில இடங்களில் மழையும் பெய்தால் அது ஊட்டியோ அல்லது கொடைக்கானலாகவோ தான் இருக்க வேண்டுமா?

நிச்சயம் இல்லை, சென்னையும் அப்படி இருக்கும். அதனால்தான் ஜூலை மாதத்தின் மிக அற்புதமான நாள் இன்று என்று கூறியிருக்கிறோம்.

இன்றைய மழை நிலவரம் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

இன்று சென்னையின் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக உள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பரவலாக இருக்காது. அங்கொன்றும், இங்கொன்றுமாகவே மழை இருக்கும். சென்னையின் பகல் நேரத்தில் மழை பெய்திருப்பது ஜூலை மாதத்தில் இதுதான் முதல் நாள் என்று நினைக்கிறேன். இன்று முழுவதுமே அவ்வப்போது மழை, பிறகு சற்று ஓய்வு என்ற நிலையே இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

கேரள மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதகிளிலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதன்கிழமைக்கு மேல் மழையின் அளவு சற்று குறையும்.

குடகு பகுதியில் 100 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கேஆர்எஸ் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வயநாடு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை முதல் கன மழை பெய்துள்ளது. கபினி அணைக்கும் நீர் வரத்து உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புதன் அல்லது வியாழக் கிழமைக்குப் பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று முற்பகலில் தாம்பரம், மடிப்பாக்கம், பல்லாவரம், கீழ்க்கட்டளை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

பாண்டிராஜ் - ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் புதிய படம்?

மலர்களிலே அவள் மல்லிகை... அன்ஸ்வரா ராஜன்!

பிரதிகா ராவலுக்கு பதக்கம் இல்லை! விவாதப் பொருளான ஐசிசியின் செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்!

ராகுல் காந்தி எப்போதும் உண்மையையே பேசுவார்: பிரியங்கா

SCROLL FOR NEXT