முகப்பு
இந்தியா

காஷ்மீரில் நான்கு இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சோதனை 

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சோதனை நடத்தி வருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:39 AM
பகிர்:

ஜம்மு: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சோதனை நடத்தி வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.அதன் அடிப்படையில் இரு மாநிலங்களிலும் தேசிய விசாரணை ஆணையம் சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இந்நிலையில் ஞாயிறன்று காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சோதனை நடத்தி வருகிறது.

அதிக வாகனங்கள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →