இந்தியா

தில்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்: மக்களே உஷார்!

IANS


புது தில்லி: இந்தியாவின் தலைநகர் தில்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் உச்ச பட்ச எச்சரிக்கையான நான்கு நிறத்திலான அறிவுறுத்தல் செய்தியில், இந்தியாவில் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சனிக்கிழமை தில்லி உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்றும், 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த 5 நாட்களுக்கும் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை 44.8 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை முதல் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வட இந்திய மாநில மக்கள் மட்டுமல்லாமல், கடுமையான வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய பணியில் இருக்கும் மக்களும் உஷாராக இருக்க வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT