முகப்பு
இந்தியா

புதிய கல்வி கொள்கை: விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அழைப்பு

புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:05 AM
பகிர்:


புது தில்லி: புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்க ஜூன் 22ம் தேதி புது தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்குமாறு, அனைத்து மாநில பள்ளிக் கல்வி மற்றும்  உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

புதிய கல்வி கொள்கை வரைவில் உள்ள அம்சங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.