முகப்பு
இந்தியா

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி! நமக்குப் பலன் கிட்டுமா?

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரித்தனை செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:05 AM
பகிர்:


மும்பை: ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரித்தனை செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்டிஜிஎஸ் (RTGS), என்இஎஃப்டி (NEFT) முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மும்பையில் இன்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆர்டிஜிஎஸ் (RTGS), என்இஎஃப்டி (NEFT) முறைகளில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி அளித்த இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான நேரத்தை ஜூன் 1ம் தேதி முதல் ஒன்றரை மணி நேரம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.