முகப்பு
இந்தியா

25 அமைச்சர்களுடன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகன் மோகன்

25 அமைச்சர்களுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு இன்று முற்பகல் 11.49 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

Updated On : 8 ஜூன், 2019 at 3:15 PM
பகிர்:


விஜயவாடா: 25 அமைச்சர்களுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு இன்று முற்பகல் 11.49 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன், 25 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த 25 அமைச்சர்களில் 5 பேர் துணை முதல்வர்களாக உள்ளனர். நாட்டிலேயே 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 25 பேரில் 3 பேர் பெண்கள். 

இன்று காலை 8.39 மணிக்கு வேலகாபுடியில் உள்ள  தலைமைச் செயலகத்துக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, மூத்த புரோகிதர்களைக் கொண்டு பூஜை நடத்திய பிறகு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். முதல்வர் நாற்காலிக்கு எதிரே தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆளுயர புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.