மத்திய அரசுத்துறை செயலர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
அனைத்து மத்திய அரசுத்துறை செயலர்களையும் திங்கள் மாலை தனது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.
புது தில்லி: அனைத்து மத்திய அரசுத்துறை செயலர்களையும் திங்கள் மாலை தனது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.
இரண்டாவது தடவையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடி அரசானது தனது முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. அதற்காக அனைத்து அமைச்சரகங்களும் செயல் திட்டங்களை வகுத்து வருகின்றன
இந்நிலையில் அனைத்து மத்திய அரசுத்துறை செயலர்களையும் திங்கள் மாலை தனது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.
Advertisement
Advertisement
பிரதமரது இல்லத்தில் திங்கள் மாலை 06.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகள் கோரப்படும் என்று தெரிகிறது.
தனது முந்தைய ஆட்சியிலும் இத்தகைய சந்திப்பை மோடி நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.