முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூவர் பலி 

ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:12 AM
பகிர்:

ஜம்மு: ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கேபி சவுக் பகுதியில் புதனன்று சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருதரப்புக்குமிடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் வீர மரணமடைந்தனர். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான்.

அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் சூழலில் அப்பகுதியை நோக்கி கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..

முழு கட்டுரையைப் படிக்க →