Pulwama Jammu And Kashmir 
இந்தியா

காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதிக்கு அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு எதிர்வினையாக அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் குறிவைத்து  துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில்  துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: மு.க. ஸ்டாலின்

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?

SCROLL FOR NEXT