இந்தியா

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி படுகொலை

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்காணாஸ் பகுதியில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி வெள்ளிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 

DIN

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்காணாஸ் பகுதியில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி வெள்ளிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாநில பாஜக-வினர் தெரிவிக்கையில்,

வடக்கு 24 பர்காணாஸ் பகுதியிலுள்ள அம்லாம்னி கிராம பஞ்சாயத்தின் பாஜக பெண் நிர்வாகியான சரஸ்வதி தாஸ் (42) திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு துப்பாக்கி குண்டு தாக்கி உயிரிழந்திருந்த பாஜக நிர்வாகி உடல் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அப்பகுதி போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் இப்பகுதியில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திரிணமூல் கட்சியினரால் 2 பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT