சீனாவை பின்னுக்குத் தள்ளி 2027க்குள் முதலிடம் பிடிக்கும் இந்தியா! அதான் அதே விஷயத்தில்தான்!!
2050ம் ஆண்டு இந்த புவியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும். 2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000)
ஐ.நா.: 2050ம் ஆண்டு இந்த புவியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும். 2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000)
இந்த எண்ணிக்கையில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும்பட்சத்தில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மக்கள் தொகை அறிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டதை விட, மக்கள் தொகை வளர்ச்சி என்பது சற்று வேகம் குறைவாகவே நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போதிருக்கும் 770 கோடி மக்கள் தொகை என்பது, அடுத்த 30 ஆண்டுகளில் 950 கோடியாக அதிகரிக்கும் என்றும், மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கப்பட்டு, வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.