இந்தியா

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வருகை 

மூன்று நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புது தில்லி: மூன்று நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழன்று தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஜூன் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அவர் இங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு நாட்டு பரஸ்பர உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவர்களிடையே ஆலோசனை நடைபெறும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT