இந்தியா

சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்த ராகுல் காந்தியின் ட்வீட்: பாஜக கண்டனம் 

சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

PTI

புது தில்லி: சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் குழுவாக அல்லது தனித்தனியாக பங்கேற்பாளர்கள் யோகா செய்து புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்வீட்டில் இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுக்கு உதவும் நாய்கள், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து யோகா செய்யும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்கு அவர் "புதிய இந்தியா" என்று பெயரிட்டு இருந்தார்.

அவரது இந்த ட்வீட்டிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அவரை பலரும் விமர்சித்திருந்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கனா... ரணாவத்!

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT