முகப்பு
இந்தியா

ம.பி.: இரவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பகலில் உயிர் பிழைத்த அதிசயம்(?)

மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதிய நபர் ஒருவர் இறந்து விட்டதாக இரவில் அறிவித்த அதே மருத்துவர், காலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 22 ஜூன், 2019 at 12:52 PM
பகிர்:


மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதிய நபர் ஒருவர் இறந்து விட்டதாக இரவில் அறிவித்த அதே மருத்துவர், காலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சாகர் மாவட்டம் பினா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 72 வயது கிஷண் என்பவர்  வியாழக்கிழமை இரவு மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அதே நபருக்கு காலையில் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் காலை 10.20 மணிக்கு உண்மையிலேயே உயிரிழந்துவிட்டார்.

Advertisement

வயதான நபர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் உயிரிழந்தவரின் விவரங்களை பதிவு செய்து கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டவர் உயிரோடு சிகிச்சை பெற்று வந்தார். பணியில் இருந்த மருத்துவர், உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நபர் உயிரோடு இருப்பதாகக் காவல்துறையிடம் கூறி, காவலரை திருப்பி அனுப்பி விட்டார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முதியவர் வெள்ளிக்கிழமை காலை 10.20க்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இரவே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், இரவு முழுவதும் சிகிச்சை கிடைக்காமல் உயிரோடுதான் இருந்துள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக் குறைவு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.