இந்தியா

கை விரல் பாதிப்பு: அரசு மருத்துவமனையில் கமல்நாத் அறுவை சிகிச்சை

கை விரல் பாதிப்பு காரணமாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

DIN

கை விரல் பாதிப்பு காரணமாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

நீண்டகால வாலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து போபாலில் உள்ள ஹமிதியா அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பகல் 11 மணியளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த வலது கை விரல் பகுதியில் கமல்நாத்துக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலூஜா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT