இந்தியா

ம.பி. சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது

PTI

மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்து 4 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த வினோத் டாங்கி (27) என்பவரே சிறைக் கைதிகள் தப்பிக்க மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த வினோத் டாங்கிக்கு, சிறையில் இருந்து தப்பிப்பது குறித்து சில குறிப்புகள் கிடைத்து, அதனை சிறையில் இருக்கும் தனது  தோழர்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையாளர் போல வந்து, அவர்களுக்கு தெரிவித்து, சிறையில் இருந்து தப்பிக்க யோசனை அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர்.

மத்தியப் பிரதேச மாநிலம், நீமச் மாவட்டத்தில் கனவாடி சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கைதிகளில் 4 பேர் நேற்று அதிகாலை சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். 

இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. தப்பியோடிய 4 கைதிகள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   சிறையில் இருந்து தப்பியவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT