முகப்பு
இந்தியா

பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின் ஆட்டம், பாட்டம்: டிக் டாக் விடியோவால் சர்ச்சை (விடியோ இணைப்பு) 

ஒதிஷாவின் மாவட்டத் தலைநகர மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில், செவிலியர்கள் நடனம் ஆடி டிக் டாக் விடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புபனேஸ்வர்: ஒதிஷாவின் மாவட்டத் தலைநகர மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில், செவிலியர்கள் நடனம் ஆடி டிக் டாக் விடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒதிஷா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் மாவட்டத் தலைநகர அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நோய் மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் பெண் செவிலியர்கள் சிலர் 'டிக் டாக்' செயலி மூலம் அங்கு விடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் பாடல்களுக்கு நடனம் ஆடுவதுடன், வேடிக்கையான காட்சிகளில் இடம்பெறும் வசனங்களுக்கு வாயசைத்து நடித்துமுள்ளனர். இது இணையதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையடுத்து மாவட்டத் தலைமை  மருத்துவ அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்கியாக சம்பந்தப்பட்ட செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதுதொடர்பான விரிவான விசாரணை அறிக்கையானது தலைமை அதிகாரிக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று, மருத்துவமனை பொறுப்பு அதிகாரி தபன் குமார் திண்டா தெரிவித்துள்ளார்.      

முழு கட்டுரையைப் படிக்க →