இந்தியா

உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

DIN


ரா உளவு அமைப்பு, ஐ.பி. புலனாய்வு அமைப்பு ஆகியவற்றுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு புதன்கிழமை நியமித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சமந்த் குமார் கோயலை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஐ.பி. புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் குமாரை நியமிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. 2 பேரின் பதவிக்காலமும் 2 ஆண்டுகள் ஆகும். மேற்கண்ட தகவல், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரா உளவு அமைப்பின் தலைவராக அனில் கே. தாஸ்மானா தற்போது உள்ளார். ஐ.பி. புலனாய்வு அமைப்பின் தலைவராக ராஜீவ் ஜெயின் உள்ளார். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் மேற்கண்டவர்கள் விரைவில் பொறுப்பு ஏற்கவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT