முகப்பு
இந்தியா

புணே கட்டட விபத்து: 15 பேர் சாவு

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மும்பை மற்றும் உள்ளிட்ட நகரங்களில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

Updated On : 29 ஜூன், 2019 at 10:28 AM
பகிர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் உள்ளிட்ட நகரங்களில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புணேவில் பெய்த பலத்த மழை காரணமாக கோந்தாவா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி சுற்றுச் சுவர் வெள்ளிக்கிழமை இடிந்து தரைமட்டமானது. 

இந்த விபத்தில் அருகில் இருந்த குடிசைப் பகுதியில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.