முகப்பு
இந்தியா

இந்த நூர் ஜஹான் மாம்பழத்துக்கு நீங்கள் 600 ரூபாய் கொடுப்பீர்களா பாருங்கள்? ஸ்ரீதேவி மாம்பழமும் இருக்காம்!

மிகவும் இனிப்பான சுவை மற்றும் அழகான வடிவம் காரணமாக ஒரு வகை மாம்பழத்துக்கு நூர் ஜஹான் என்று பெயரிடப்பட்டது.

Updated On : 29 ஜூன், 2019 at 10:46 AM
பகிர்:


போபால்: மிகவும் இனிப்பான சுவை மற்றும் அழகான வடிவம் காரணமாக ஒரு வகை மாம்பழத்துக்கு நூர் ஜஹான் என்று பெயரிடப்பட்டது.

அது மட்டுமா, அதை விடப் பெரிய மாம்பழத்துக்கு ஷா ஜஹான் என்றும், பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி பெயர் ஒரு கூட மாம்பழத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் மட்டுமே விளைவிக்கப்படும் இந்த வகை மாம்பழங்கள், மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டுமே காய்க்கிறது.

Advertisement

நூர் ஜஹான் மாம்பழ மரங்கள் வெறும் 7 மரங்கள்தான் உள்ளன. இதில் விளையும் மாங்காய்கள் 12 முதல் 15 இஞ்ச் வரை இருக்கும். ஒவ்வொரு காயும் இரண்டு முதல் நான்கு கிலோ எடை கொண்டதாக உள்ளது.

இது குறித்து மாம்பழத் தோட்ட உரிமையாளர் பரத்ராஜ் சிங் கூறுகையில், மற்ற மாம்பழத் தோட்ட உரிமையாளர்களைப் போலவே நாங்களும் மாம்பழங்களை விற்பனை செய்கிறோம். அதன் எடை மற்றும் அளவை அடிப்படையாக வைத்து விலையை நிர்மாணிக்கிறோம். ஒரு மாங்காய் விலை இப்படி ரூ.400 முதல் ரூ.600 வரை நிர்ணயிக்கப்படுகிறது. இதேப்போல ஷாஜஹான் வகை மாம்பழங்களும் அதிக எடையுடன் பெரிய அளவில் இருக்கும். ஸ்ரீதேவி ரக மாம்பழம் மிக அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்குத்தான் அதிக கிராக்கி என்று தெரிவித்துள்ளார்.

இங்கே இந்த வகைகளோடு, சௌஸா, லங்டா, கேசர், நீலம், பாதாம் உள்ளிட்ட மாம்பழ ரகங்களும் கிடைக்கின்றன.

எனவே, நூர் ஜஹான் போன்ற மாம்பழ ரகங்களை ருசிக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் ரூ.400 முதல் ரூ.600 வரை செலவழிக்க வேண்டியது இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.