இந்தியா

சுதந்திர  போராட்ட வீரரின் வாரிசு என போலிச் சான்றிதழ்: 20 மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ் 

DIN

மும்பை: மஹாராஷ்டிராவில் சுதந்திர  போராட்ட வீரரின் வாரிசு என போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 20 மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பீட் மாவட்ட சிவில் மருத்துவமனையில், 2004 ஆம் ஆண்டு சுதந்திர  போராட்ட வீரரின் வாரிசு என சான்றிதழ் கொடுத்து 20 பேர் அதற்குரிய ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ந்தனர்.     

அவர்களில் மூன்று பேர் மூன்றாம் நிலை பணியாளர்களாகவும், 17 பேர் நான்காம் நிலை பணியாளர்களாகவும் பணியமர்த்தப்பட்டனர்,

பின்னர் கடந்த ஆண்டு நடந்த பரிசோதனையின் போது அவகள் கொடுத்த சான்றிதழ்கள் போலி என கண்டறியப்பட்டது. இதைத் தொடந்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்துஅவர்கள் 20 பேரும் மஹாராஷ்டிரா பணியாளர் தீர்ப்பாணையத்தில் மனு செய்தனர். அதில் அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடந்து அவர்கள் 20 பேரும் தற்போது பணியிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT