முகப்பு
இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது: காங்கிரஸ் அறிவிப்பு 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது: காங்கிரஸ் அறிவிப்பு 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:18 AM
பகிர்:

புது தில்லி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தில்லியில் மொத்தம்  7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான நிலையில் இருப்பதால் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தில்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டது. காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முதலில் முன்வந்துள்ளது.

ஆனால் காங்கிரசைச் சேர்ந்தவரான தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு ஆம் ஆத்மி  கூட்டணியில் நாட்டம் இல்லை என தகவல் வெளியாகியது. இதற்கிடையே தொடர் தாமதத்தின் காரணமாக 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை மட்டும் காங்கிரசுக்கு வைத்திருந்தது.

இந்நிலையில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாயன்று சந்தித்து பேசினர். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பாலான மாநில தலைவர்களின் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித் பேசுகையில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியதோடு, காங்கிரஸ் ஏழு  தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்பதையும் தெரிவித்தார்.  

முழு கட்டுரையைப் படிக்க →