இந்தியா

புல்வாமாவில் நடைபெற்றது விபத்து; பயங்கரவாத தாக்குதல் அல்ல: திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை

""ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; அதுவொரு விபத்து'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை

DIN

""ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; அதுவொரு விபத்து'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று திக்விஜய் சிங் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இதற்கு மத்திய அரசும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் பயங்கரவாத சம்பவம் அல்ல; அதுவொரு விபத்து என்று திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "புல்வாமாவில் நடைபெற்றது விபத்து; புல்வாமா சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. இது இந்திய அரசின் நம்பகத்தன்மை மீது கேள்வியை எழுப்புகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. சுட்டுரையில் திக்விஜய் சிங்குக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தனது கருத்தை திக்விஜய் சிங் வாபஸ் பெற்றார். அவர் வெளியிட்ட பதிவில், "புல்வாமாவில் நடைபெற்றது பயங்கரவாதத் தாக்குதல்தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை; முக்கிய கேள்விகளுக்கு ராணுவம் பதிலளிக்காமல் தவிர்க்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
வி.கே. சிங் கண்டனம்: முன்னதாக, திக்விஜய் சிங்கின் கருத்துக்கு மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான வி.கே. சிங் கடும் கண்டனத்தை தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், "அரசியல் பேச்சுக்காக பயங்கரவாதத் தாக்குதலை விபத்து என கூற வேண்டாம்; ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை விபத்து எனத் தெரிவிப்பீர்களா? நாட்டையும், நமது பாதுகாப்புப் படையினரின் மனஉறுதியையும் இந்த முட்டாள்தனமான கருத்துகள் மூலம் பலவீனப்படுத்த வேண்டாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

பசுமை சாம்பியன் விருது: தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

ஆடையில் தீப் பற்றி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT