இந்தியா

40 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை

DIN


மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்ட நிர்வாகம் 40 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நவால் கிஷோர் ராம் கூறியதாவது: மொத்தம் 45 பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மற்ற 5 பேர் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள். இவர்கள் அனைவருமே 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிவிட்டார்கள். அதிலும் புணேயில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்களிடம் இருந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்கும் உரிமை மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது. அதன்படி அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் முடிவை எடுத்தேன். அவர்களது விண்ணப்பங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. புலனாய்வுத் துறை உள்ளிட்ட அமைப்புகளும் இதற்கு அனுமதி அளித்துள்ளன. விண்ணப்பம் அளித்த அனைவரிடமும் நான் தனிப்பட்ட முறையில் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT